என்றும்நா டுறுவோர்க் கின்பமே புரியும் எந்தையே என்றனைச் சூழ்ந்தே நன்றுநா டியநல் லோர்உயிர்ப் பிரிவை நாயினேன் கண்டுகேட் டுற்ற அன்றுநான் அடைந்த நடுக்கமுந் துயரும் அளவிலை அளவிலை அறிவாய் இன்றவர் பிரிவை நினைத்திடுந் தோறும் எய்திடும் துயரும்நீ அறிவாய்