என்றென் றழுதாய் இலையேஎன் நெஞ்சமே ஒன்றென்று நின்ற உயர்வுடையான் - நன்றென்ற செம்மைத் தொழும்பர்தொழும் சீர்ஒற்றி யூர்அண்ணல் நம்மைத் தொழும்புகொள்ளும் நாள்