என்றே பிணிகள் ஒழியும்என் றேதுயர் எய்தியிடேல் நின்றே தணிகையன் ஆறெழுத் துண்டுவெண் ணீறுண்டுநீ நன்றேஎக் காலமும் வாழிய நன்னெஞ்சமே திருச்சிற்றம்பலம் எண்ணத் தேங்கல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்
என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே