என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே என்முன்அடைந் தெனைநோக்கி இளநகைசெய் தருளித் தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத் தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல் வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம் உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய் ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே