எப்பாலும் நின்அன்பர் எல்லாம் கூடி ஏத்துகின்றார் நின்பதத்தை ஏழை யேன்நான் வெப்பாய மடவியர்தம் கலவி வேட்டு விழுகின்றேன் கண்கெட்ட விலங்கே போல இப்பாரில் மயங்குகின்றேன் நன்மை ஒன்றும் எண்ணுகிலேன் முக்கணுடை இறைவா என்றன் அப்பாஎன் ஆருயிர்க்கோர் துணைவா வீணில் அலைகின்றேன் என்செய்கேன் அந்தோ அந்தோ