எப்பொருட்கும் எவ்வுயிர்க்கும் உள்ளகத்தும் புறத்தும் இயல்உண்மை அறிவின்ப வடிவாகி நடிக்கும் மெய்ப்பொருளாம் சிவம்ஒன்றே என்றறிந்தேன் உனக்கும் விளம்புகின்றேன் மடவாய்நீ கிளம்புகின்றாய் மீட்டும் இப்பொருள்அப் பொருள்என்றே இசைப்பதென்னே பொதுவில் இறைவர்செயும் நிரதிசய இன்பநடந் தனைநீ பைப்பறவே காணுதியேல் அத்தருணத் தெல்லாம் பட்டநடுப் பகல்போல வெட்டவெளி யாமே கிளத்துகின்றாய் - முதற்பதிப்பு, பொ சு, ச மு க