எம்பால் அருள்வைத் தெழிலொற்றி யூர்கொண் டிருக்கும் இறைச் செம்பால் கலந்தபைந் தேனே கதலிச் செழுங்கனியே வெம்பாலை நெஞ்சருள் மேவா மலர்ப்பத மென்கொடியே வம்பால் அணிமுலை மானே வடிவுடை மாணிக்கமே