எம்பெருமான் நின்விளையாட் டென்சொல் கேன்நான் ஏதுமறி யாச்சிறியேன் எனைத்தான் இங்கே செம்புனலால் குழைத்தபுலால் சுவர்சூழ் பொத்தைச் சிறுவீட்டில் இருட்டறையில் சிறைசெய் தந்தோ கம்பமுறப் பசித்தழலுங் கொளுந்த அந்தக் கரணமுதல் பொறிபுலப்பேய் கவர்ந்து சூழ்ந்து வம்பியற்றக் காமாதி அரட்டர் எல்லாம் மடிபிடித்து வருத்தவென்றோ வளர்த்தாய் எந்தாய்