எம்மை வாட்டும்இப் பசியினுக் கெவர்பால் ஏகு வோம்என எண்ணலை நெஞ்சே அம்ம ஒன்றுநீ அறிந்திலை போலும் ஆலக் கோயிலுள் அன்றுசுந் தரர்க்காய் செம்மை மாமலர்ப் பதங்கள்நொந் திடவே சென்று சோறிரந் தனித்தருள் செய்தோன் நம்மை ஆளுடை நாதன்தன் நாமம் நமச்சி வாயம்காண் நாம்பெறும் துணையே