எம்மையும்என் தனைப்பிரியா தென்னுளமே இடங்கொண்ட இறைவன் தன்னை இம்மையில்என் தனக்கழியாத் திருவடிவம் தந்தானை எல்லாம் வல்ல செம்மைதரு சித்தனைஎன் சிவபதியைத் தெள்ளமுதத் திரளை என்றன் அம்மையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ தியைப்பெற்றேன் அச்சோ அச்சோ