எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள் எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர் கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர் ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர் அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர் உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம் உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே () எவ்வகைசார் - முதற்பதிப்பு, பொ சு பதிப்பு