எருதின்உழைத் திருந்தேனுக் கிரங்கிஅடிச் சிறியேன் இருந்தஇடந் தனைத்தேடி இணைப்பரிமான் ஈர்க்கும் ஒருதிருத்தேர் ஊர்ந்தென்னை உடையவளோ டடைந்தே உள்வாயில் தாழ்பிடித்துப் பயத்தொடுநின் றேனே வருதிஎனத் திருக்கரங்கள் அசைத்தழைத்த பதியே மணியேஎன் மருந்தேஎன் வாழ்வேஎன் வரமே சுருதிமுடி அடிக்கணிந்த துரையேஎன் உளத்தே சுத்தநடம் புரிகின்ற சித்தசிகா மணியே