எற்றே நிலைஒன்றும் இல்லா துயங்கும் எனக்கருளச் சற்றேநின் உள்ளம் திரும்பிலை யான்செயத் தக்கதென்னே சொற்றேன் நிறைமறைக் கொம்பேமெய்ஞ் ஞானச் சுடர்க்கொழுந்தே மற்றேர் அணியொற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே
எற்றே மதியிலியே னெண்ணா துரைத்ததனைச் சற்றே நினைத்திடினுந் தாது கலங்குதடா