எற்றேஈ ததிசயம்ஈ ததிசயம்என் இசைப்பேன் இச்சையெலாம் விடுத்துவனத் திடத்தும்மலை யிடத்தும் உற்றேமெய்த் தவம்புரிவார் உன்னிவிழித் திருப்ப உலகவிட யங்களையே விலகவிட மாட்டேன் கற்றேதும் அறியகிலேன் கடையரினுங் கடையேன் கருணையிலாக் கல்மனத்துக் கள்வன்எனைக் கருதிச் சற்றேயும் அன்றுமிகப் பெரிதெனக்கிங் களித்தான் தனித்தசிவ காமவல்லிக் கினித்தநடத் தவனே