Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2344
எல்லா முடைய இறையவ னேநினை ஏத்துகின்ற
நல்லார் தமக்கொரு நாளேனும் பூசை நயந்தியற்றிச்
சொல்லால் அவர்புகழ் சொல்லாதிவ் வண்ணம் துயர்வதற்கென்
கல்லாமை ஒன்றுமற் றில்லாமை ஒன்றிரு காரணமே
பாடல் எண் :4418
எல்லா உயிர்களும் நல்லார் எனத்தொழும் 

எல்லாம்வல் லீர்இங்கு வாரீர் 

சொல்லா நிலையினீர் வாரீர் வாரீர்
பாடல் எண் :5451
எல்லா உலகமும் என்வசம் ஆயின 

எல்லா உயிர்களும் என்உயிர் ஆயின 
எல்லா ஞானமும் என்ஞானம் ஆயின 

எல்லா வித்தையும் என்வித்தை ஆயின 
எல்லா போகமும் என்போகம் ஆயின 

எல்லாஇன்பமும் என்இன்பம் ஆயின 
எல்லாம் வல்லசிற் றம்பலத் தென்னப்பர் 

எல்லாம் நல்கிஎன் உள்ளத்துள் ளாரே
பாடல் எண் :5488
எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான் 
எல்லாம் செயவல்லான் எம்பெருமான் - எல்லாமாய் 
நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான் 
ஒன்றாகி நின்றான் உவந்து

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.