எல்லாஞ்செய வல்லவ னேஎனை ஈன்றதாயின் நல்லாய்சிவ ஞானிகள் பெற்றமெய்ஞ் ஞானவாழ்வே கொல்லாநெறி காட்டிஎன் தன்னைக் குறிப்பிற்கொண்டென் பொல்லாமை பொறுத்தனை வாழ்கநின் பொற்பதமே