எல்லாமுஞ் செயவல்ல தனித்தலைவர் பொதுவில் இருந்துநடம் புரிகின்ற அரும்பெருஞ்சோ தியினார் நல்லாய்நல் நாட்டார்கள் எல்லாரும் அறிய நண்ணிஎனை மணம்புரிந்தார் புண்ணியனார் அதனால் இல்லாமை எனக்கில்லை எல்லார்க்கும் தருவேன் என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் அம்மா செல்லாத அண்டமட்டோ அப்புறத்தப் பாலும் சிவஞானப் பெருஞ்செல்வம் சிறப்பதுகண் டறியே