Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1089
எளியனேன் மையல் மனத்தினால் உழன்றேன் 

என்செய்வேன் என்செய்வேன்பொல்லாக் 
களியனேன் வாட்டம் கண்டனை இன்னும் 

கருணைசெய் திலைஅருட் கரும்பே 
அளியனே திருச்சிற் றம்பலத் தொளியே 

அருமருந் தேவட வனத்துத் 
தனியனே ஒற்றித் தலத்தமர் மணியே 

தயையிலி போல்இருந் தனையே
பாடல் எண் :2578
எளியனேன் சிறியன்யான் செய்பிழைகள் சிறியவோ எழுகடலி னும்பெரியவே

என்செய்கேன் என்செய்கேன் இனிஆயி னும்செயா தெந்தைநினை ஏத்தஎன்றால்
வளியின்வான் சுழல்கின்ற பஞ்சாக நெஞ்சால் மயங்குகின் றேன்அடியனேன்

மனம்எனது வசமாக நினதுவசம் நானாக வந்தறிவு தந்தருளுவாய்
ஒளியின்ஒளி யேநாத வெளியின் வெளியேவிடய உருவின்உரு வேஉருவினாம்

உயிரின்உயி ரேஉயர்கொள் உணர்வின்உணர் வேஉணர்வின் உறவினுற வேஎம்இறையே
களியின்நிறை வேஅளிகொள் கருணைநிதி யேமணிகொள் கண்டஎண் தோள்கடவுளே

கனகஅம் பலநாத கருணையங் கணபோத கமலகுஞ் சிதபாதனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.