எளியரை வலியார் அடித்தபோ தையோ என்மனம் கலங்கிய கலக்கம் தெளியநான் உரைக்க வல்லவன் அல்லேன் திருவுளம் அறியுமே எந்தாய் களியரைக் கண்டு பயந்தஎன் பயந்தான் கடலினும் பெரியது கண்டாய் அளியர்பால் கொடியர் செய்தவெங் கொடுமை அறிந்தஎன் நடுக்கம்ஆர் அறிவார் அறியும் எந்தாயே - பி இரா பதிப்பு