எளியவர் விளைத்த நிலமெலாங் கவரும் எண்ணமே பெரிதுளேன் புன்செய்க் களியுணும் மனையில் சர்க்கரை கலந்து காய்ச்சுபால் கேட்டுண்ட கடையேன் துளியவர்க் குதவேன் விருப்பிலான் போலச் சுவைபெறச் சுவைத்தநாக் குடையேன் நளிர்எனச் சுழன்றேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே