Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :190
எளியேன் நினது திருவருளுக் கெதிர்நோக் குற்றே இரங்குகின்ற
களியேன் எனைநீ கைவிட்டால் கருணைக் கியல்போ கற்பகமே
அளியே தணிகை அருட்சுடரே அடியர் உறவே அருள்ஞானத்
துளியே அமையும் எனக்கெந்தாய் வாஎன் றொருசொல் சொல்லாயே

திருச்சிற்றம்பலம்

 பொறுக்காப் பத்து

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் :210
எளியேன் நினது சேவடியாம் இன்ப நறவை எண்ணிஎண்ணி
அளியேன் நெஞ்சம் சற்றேனும் அன்பொன் றில்லேன் அதுசிறிதும்
ஒளியேன் எந்தாய் என்உள்ளத் தொளித்தே எவையும் உணர்கின்றாய்
வளியே முதலாய் நின்றருளும் மணியே தணிகை வாழ்மன்னே

 ஆறெழுத் துண்மை

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
திருச்சிற்றம்பலம்
பாடல் எண் :273
எளியேன் என்ன இருப்பாரோ ஏழைக் கிரங்கும் விருப்பாரோ
அளியேன் பேர்நெஞ் சிருப்பாரோ அழியாக் காமம் திருப்பாரோ
களியேன் என்ன உருப்பாரோ கருதும் அருட்குக் கருப்பாரோ
தெளியேன் யான்என் செய்கேனே தென்பால் தணிகைப் பொருப்பாரே
பாடல் எண் :593
எளியேன் இழைத்த பெரும்பிழைகள் எல்லாம் பொறுத்திங் கின்பளித்தாய்
களியேன் தனைநீ இனிஅந்தோ கைவிட் டிடில்என் கடவேனே
ஒளியே முக்கட் செழுங்கரும்மே ஒன்றே அன்பர் உறவேநல்
அளியே பரம வெளியேஎன் ஐயா அரசே ஆரமுதே
பாடல் எண் :2673
எளியேன் கருணைத் திருநடஞ்செய் இணைத்தாள் மலர்கண் டிதயமெலாம்
களியேன் கருங்கற் பாறைஎனக் கிடக்கின் றேன்இக் கடையேனை
அளியே பெருக ஆளுதியோ ஆள்கி லாயோ யாதொன்றும்
தெளியேன் அந்தோ அந்தோஎன் செய்வேன் விலங்கிற் சிறியேனே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.