எழுத்தினொடு பதமாகி மந்திரமாய்ப் புவனம் எல்லாமாய்த் தத்துவமாய் இயம்புகலை யாகி வழுத்துமிவைக் குள்ளாகிப் புறமாகி நடத்தும் வழியாகி நடத்துவிக்கும் மன்னிறையு மாகி அழுத்துறுமிங் கிவையெல்லாம் அல்லனவாய் அப்பால் ஆகியதற் கப்பாலும் ஆனபதம் வருந்த இழைத்துநடந் திரவில்என்பால் அடைந்தொன்று கொடுத்தாய் எம்பெருமான் நின்பெருமை என்னுரைப்பேன் வியந்தே