எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம் எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம் அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம் அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம் ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம் ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம் செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்