எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்குசிவம் ஒன்றே என்னாணை என்மகனே இரண்டில்லை ஆங்கே செவ்விடத்தே அருளொடுசேர்த் திரண்டெனக்கண் டறிநீ திகைப்படையேல் என்றெனக்குச் செப்பியசற் குருவே அவ்விடத்தே உவ்விடத்தே அமர்ந்ததுபோல் காட்டி அங்குமிங்கும் அப்புறமும் எங்குநிறை பொருளே ஒவ்விடச்சிற் சபைஇடத்தும் பொற்சபையின் இடத்தும் ஓங்குநடத் தரசேஎன் உரையும்அணிந் தருளே