எவ்வுயிரும் பொதுஎனக்கண் டிரங்கிஉப கரிக்கின்றார் யாவர் அந்தச் செவ்வியர்தம் செயல்அனைத்தும் திருவருளின் செயல்எனவே தெரிந்தேன் இங்கே கவ்வைஇலாத் திருநெறிஅத் திருவாளர் தமக்கேவல் களிப்பால் செய்ய ஒவ்வியதென் கருத்தவர்சீர் ஓதிடஎன் வாய்மிகவும் ஊர்வ தாலோ