எவ்வுலகில் எவ்வௌர்க்கும் அரும்பெருஞ்சோ தியரே இறைவர்என்ப தறியாதே இம்மதவா திகள்தாம் கவ்வைபெறு குருடர்கரி கண்டகதை போலே கதைக்கின்றார் சாகாத கல்விநிலை அறியார் நவ்விவிழி யாய்இவரோ சிலபுகன்றார் என்றாய் ஞானநடம் கண்டேன்மெய்த் தேன்அமுதம் உண்டேன் செவ்வைபெறு சமரசசன் மார்க்கசங்கந் தனிலே சேர்ந்தேன்அத் தீமொழியும் தேமொழிஆ யினவே