ஏகமோ அன்றி அனேகமோ என்றும் இயற்கையோ செயற்கையோ சித்தோ தேகமோ பொதுவோ சிறப்பதோ பெண்ணோ திகழ்ந்திடும் ஆணதோ அதுவோ யோகமோ பிரிவோ ஒளியதோ வெளியோ உரைப்பதெற் றோஎன உணர்ந்தோர் ஆகமோ டுரைத்து வழுத்தநின் றோங்கும் அருட்பெருஞ் சோதிஎன் அரசே