ஏகாஅ னேகாஎன் றேத்திடு மறைக்கே எட்டாத நிலையேநான் எட்டிய மலையே ஓகாள மதங்களை முழுவதும் மாற்றி ஒருநிலை ஆக்கஎன் றுரைத்தமெய்ப் பரமே ஈகாதல் உடையவர்க் கிருநிதி அளித்தே இன்புறப் புரிகின்ற இயல்புடை இறையே சாகாத வரந்தந்திங் கெனைக்காத்த அரசே தனிநட ராசஎன் சற்குரு மணியே திருச்சிற்றம்பலம் -------------------------------------------------------------------------------- தற்போத இழப்பு எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்