பாடல் எண் :4056
ஏகாந்த மாகி வெளியாய் இருந்ததிங் கென்னைமுன்னே
மோகாந்த காரத்தின் மீட்டதென் நெஞ்ச முயங்கிரும்பின்
மாகாந்த மானது வல்வினை தீர்த்தெனை வாழ்வித்தென்றன்
தேகாந்த நீக்கிய துத்தர ஞான சிதம்பரமே
--------------------------------------------------------------------------------
செய்பணி வினவல்
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பாடல் எண் :4430
ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென்
றேகாந்தம் சொல்லினீர் வாரீர்
தேகாந்தம் இல்லீரே வாரீர் வாரீர்
பாடல் எண் :4583
ஏகாந்த மாகிய ஸோதி - என்னுள்
என்றும் பிரியா திருக்கின்ற ஸோதி
சாகாத வரந்தந்த ஸோதி - என்னைத்
தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஸோதி சிவசிவ
பாடல் எண் :5125
ஏகாந்த சர்வேச சமோதம
யோகாந்த நடேச நமோநம
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.