ஏங்கலை மகனே தூங்கலை எனவந் தெடுத்தெனை அணைத்தஎன் தாயை ஓங்கிய எனது தந்தையை எல்லாம் உடையஎன் ஒருபெரும் பதியைப் பாங்கனில் என்னைப் பரிந்துகொண் டெல்லாப் பரிசும்இங் களித்ததற் பரத்தைத் தாங்கும்ஓர் நீதித் தனிப்பெருங் கருணைத் தலைவனைக் கண்டுகொண் டேனே