ஏதாகு மோஎனநான் எண்ணி இசைத்தஎலாம் வேதாக மம்என்றே மேல்அணிந்தான் - பாதார விந்தம் எனதுசிர மேல்அமர்த்தி மெய்அளித்த எந்தைநட ராஜன் இசைந்து