ஏது செய்குவ னேனும் என்றனை ஈன்ற நீபொறுத் திடுதல் அல்லதை ஈது செய்தவன் என்றிவ் வேழையை எந்த வண்ணம்நீ எண்ணி நீக்குவாய் வாது செய்வன்இப் போது வள்ளலே வறிய னேன்என மதித்து நின்றிடேல் தாது செய்மலர்ப் பொழில்கொள் போரிவாழ் சாமி யேதிருத் தணிகை நாதனே