ஏதும் தெரியா தகங்கரித்திங் கிருந்த சிறியேன் தனைவலிந்தே எல்லா உலகும் அதிசயிக்க எல்லாம் வல்ல சித்தெனவே ஓதும் பொருளைக் கொடுத்தென்றும் உலவா இன்பப் பெருநிலையில் ஓங்கி உறவைத் தனையேஎன் னுடைய ஒருமைப் பெருமானே ஈதுன் கருணைக் கியல்போநீ என்பால் வைத்த பெருங்கருணை இந்நாட் புதிதே அந்நாளில் இலையே இதனை எண்ணியநான் தாதும் உணர்வும் உயிரும்உள்ளத் தடமும் பிறவாந் தத்துவமும் தாமே குழைந்து தழைந்தமுத சார மயமா கின்றேனே