ஏய்ந்தபொன் மலைமேல் தம்பத்தில் ஏறி ஏகவும் ஏகவும் நுணுகித் தேய்ந்தபோ தடியேன் பயந்தவெம் பயத்தைத் தீர்த்துமேல் ஏற்றிய திறத்தை வாய்ந்துளே கருதி மலைஎனப் பணைத்தே மனங்களிப் புற்றுமெய் இன்பம் தோய்ந்துநின் றாடிச்சுழன்றதும் இந்நாள் சுழல்வதும் திருவுளம் அறியும்