ஏய்ந்து வஞ்சகர் கடைத்தலை வருந்தி இருக்கின் றாய்இனி இச்சிறு பொழுதும் சாய்ந்து போகின்ற தெழுதிஎன் நெஞ்சே தகைகொள் ஒற்றியம் தலத்தினுக் கேவி வாய்ந்து சண்முக நமசிவ சிவஓம் வரசு யம்புசங் கரசம்பு எனவே ஆய்ந்து போற்றுதும் ஐயுறல் என்மேல் ஆணை காண்அவர் அருள்பெறல் ஆமே