ஏய்ப்பிறப்பொன் றில்லாதோய் என்பிறப்பின் ஏழ்மடங்கோர் பேய்ப்பிறப்பே நல்ல பிறப்பந்தோ - வாய்ப்புலகம் வஞ்சமெனத் தேக மறைத்தடிமண் வையாமல் அஞ்சிநின்னோ டாடும் அது