ஏறியநான் ஒருநிலையில் ஏறஅறி யாதே இளைக்கின்ற காலத்தென் இளைப்பெல்லாம் ஒழிய வீறியஓர் பருவசத்தி கைகொடுத்துத் தூக்கி மேலேற்றச் செய்தவளை மேவுறவுஞ் செய்து தேறியநீர் போல்எனது சித்தமிகத் தேறித் தெளிந்திடவுஞ் செய்தனைஇச் செய்கைஎவர் செய்வார் ஊறியமெய் அன்புடையார் உள்ளம்எனும் பொதுவில் உவந்துநடம் புரிகின்ற ஒருபெரிய பொருளே