ஏறு கின்றிலேன் இழிகிலேன் நடுநின் றெய்க்கின் றேன்பவம் என்னும்அக் குழியில் தேறு கின்றிலேன் சிக்கெனச் சிவனே செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் கூறு கின்றதென் கடவுள்நீ அறியாக் கொள்கை ஒன்றிலை குன்றவில் லோனே பூறு வங்கொளும் ஒற்றிஅம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே