ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன் ஏதமெலாம் நிறைமனத்தேன் இரக்கமிலாப் புலையேன் சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன் செய்வகைஒன் றறியாத சிறியரினும் சிறியேன் மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன் வஞ்சம்எலாம் குடிகொண்ட வாழ்க்கைமிக உடையேன் வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே