ஏற்றமுறும் ஐங்கருவுக் கியல்பகுதிக் கரணம் எழுகோடி ஈங்கிவற்றுக் கேழ்இலக்கம் இவைக்கே தோற்றமுறும் எழுபதினா யிரமிவற்றுக் கெழுமை துன்னியநூ றிவற்றினுக்குச் சொல்லும் எழுபதுதான் ஆற்றலுறும் இவைதமக்கோர் ஏழாம்இக் கரணம் அனைத்தினையும் தனித்தனியே தோற்றிநிலை பொருத்திச் சாற்றரிய வடிவுவண்ணம் சுவைப்பயன்உண் டாக்கும் சாமிதிரு வடிப்பெருமை சாற்றுவதார் தோழி