ஏல வார்சூழ லாள் இடத் தவனே என்னை ஆண்டவ னேஎன தரசே கோல மாகமால் உருக்கொண்டும் காணாக் குரைக ழற்பதக் கோமளக் கொழுந்தே ஞால மீதில்எம் போல்பவர் பிழையை நாடி டாதருள் நற்குணக் குன்றே சில மேவிய தவத்தினர் போற்றத் திகழும் ஒற்றியூர்ச் சிவபெரு மானே