ஏலுநன் மணிமா மன்றருட் சோதி என்னுளத் தமர்ந்தனன் என்றாள் பாலும்இன் சுவையும் போன்றென தாவி பற்றினன் கலந்தனன் என்றாள் சாலும்எவ் வுலகும் தழைக்கஎன் தனக்கே சத்தியை அளித்தனன் என்றாள் மேலும்எக் காலும் அழிவிலேன் என்றாள் மிகுகளிப் புற்றனள் வியந்தே திருச்சிற்றம்பலம் டீயஉம -------------------------------------------------------------------------------- தோழிக் குரிமை கிளத்தல் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்