ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் என்றுமுன்நீ சொன்னபெருஞ் சொற்பொருளை ஆழநினைத் திடில்அடியேன் அருங்கரணம் கரைந்துகரைந் தூழியல்இன் புறுவதுகாண் உயர்கருணைப் பெருந்தகையே ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய் யான்செய்யும் துரிசுகளுக் குடனாகி மாழைஒண்கண் பரவையைத்தந் தாண்டானை மதிகில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன் என்ஆரூர் இறைவனையே - (--) சுந்தரர், திருவாரூர்ப்பதிகம்