ஐந்தொழில்நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய் வெந்தொழில்தீர்ந் தோங்கியநின் மெய்யடியார் சபைநடுவே எந்தைஉனைப் பாடிமகிழ்ந் தின்புறவே வைத்தருளிச் செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்