ஐம்பூத பரங்கள்முதல் நான்கும்அவற் றுள்ளே அடுத்திடுநந் நான்கும்அவை அகம்புறமேல் நடுக்கீழ் கம்பூத பக்கமுதல் எல்லாந்தன் மயமாய்க் காணும்அவற் றப்புறமும் கலந்ததனிக் கனலே செம்பூத உலகங்கள் பூதாண்ட வகைகள் செழித்திடநற் கதிர்பரப்பித் திகழ்கின்ற சுடரே வெம்பூதத் தடைதவிர்ந்தார் ஏத்தமணி மன்றில் விளங்கும்நடத் தரசேஎன் விளம்பும்அணிந் தருளே