ஐயனே மாலும் அயனும்நின் றறியா அப்பனே ஒற்றியூர் அரசே மெய்யனே நினது திருவருள் விழைந்தேன் விழைவினை முடிப்பையோ அன்றிப் பொய்யனேன் தன்மைக் கடாதது கருதிப் பொன் அருள் செயாதிருப் பாயோ கையனேன் ஒன்றும் அறிந்திலேன் என்னைக் காத்தருள் செய்வதுன் கடனே