ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர் ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில் விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன் துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன் சுகஅமுதன் என்னுடைய துரைஅமர்ந்திங் கிருக்க வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே