ஐயமுற்றார் எல்லாரும் புறத்திருக்க நான்போய் அம்பலத்தே திருநடங்கண் டகங்களிக்கும் போது மைஅகத்தே பொருந்தாத வள்ளல்அரு கணைத்தென் மடிபிடித்தார் நானும்அவர் அடிபிடித்துக் கொண்டேன் மெய்அகத்தே நம்மைவைத்து விழித்திருக்கின் றாய்நீ விளங்குகசன் மார்க்கநிலை விளக்குகஎன் றெனது கைஅகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார் கருணையினில் தாய்அனையார் கண்டாய்என் தோழி