ஐயம் ஏற்றுத் திரிபவர் ஆயினும் ஆசை ஆம்பொருள் ஈந்திட வல்லரேல் குய்யம் காட்டும்ம டந்தையர் வாய்ப்பட்டுன் கோல மாமலர்ப் பாதம்கு றித்திலேன் மைஉ லாம்பொழில் சூழும்த ணிகைவாழ் வள்ள லேவள்ளி நாயக னேபுவிச் சைய றும்பர ஞானிகள் போற்றிடும் சாமி யேஎனைக் காப்பதுன் தன்மையே