ஐயர்எனை ஆளுடையார் அரும்பெருஞ்சோ தியினார் அம்பலத்தே நடம்புரியும் ஆனந்த வடிவர் மெய்யர்எனை மணம்புரிந்த தனிக்கணவர் துரிய வெளியில்நிலா மண்டபத்தே மேவிஅமு தளித்தென் கையகத்தே ஒருபசும்பொற் கங்கணமும் புனைந்தார் கங்கணத்தின் தரத்தைஎன்னால் கண்டுரைக்கப் படுமோ வையகமும் வானகமும் கொடுத்தாலும் அதற்கு மாறாக மாட்டாதேல் மதிப்பரிதாம் அதுவே